மா மா காய்
மா மா காய்
அன்பு என்றச் சொல்லுக்கே
ஆனாய் விளக்கம் கண்ணெதிர்நீ
கண்ணை இமையும் பிரிந்திடலாம்
கடலில் அலையும் ஓய்ந்திடலாம்
தன்னை மறந்து தெளிவிழந்து
யானும் வாழ நேரிடலாம்
உன்னைப் பிரிந்து ஒருகணமும்
உயிரோ டிருக்க முடியாதே!
கதிரோன் தன்னால் இவ்வுலகில்
காணும் எல்லாம் உயிர்த்திடுமே
மதியின் ஒளியும் அவனாலே
மண்ணில் மழையும் அவனாலே
சதியென் வாழ்வும் உன்னாலே
சாவும் உந்தன் மடிமீதே
கதியுன் கையாம் கர்ப்பத்தில்
காலம் கரையக் களித்திருப்பேன்...
மடிமேல் உன்னை நானிருத்தி
மயக்கம் தீர துணையிருப்பேன்
இடிப்போல் துன்பம் தீண்டாமல்
எந்தன் தோளில் சாய்ந்திடுநீ
வடியும் துயரும் விழிநீரை
வாவென் கண்ணில் வழியவிடு
தடையே யின்றி நீயுயரும்
தருனம் நானுன் கால்நிழலில்.
Wednesday, March 31, 2010
Subscribe to:
Posts (Atom)