Tuesday, December 25, 2018

2018 -----> 2019



2018
எனக்கு
சில பரிசுகளையும்
சில பாடங்களையும்
தந்து செல்கிறது….

சங்கத் தமிழையும்
பாரதியையும்
மறுபடி சுவைத்ததில்
மகிழ்ச்சி…
உரைநடை எழுத
உண்மையாய் முயன்றதில்
உற்சாகம்…
                                          
சிலர் நட்பாக
மலர்ந்ததில் மகிழ்ச்சி…
அல்லார் சிலரை
அடையாளம் கண்டதில்
மகிழ்ச்சி..

சின்ன சின்ன
வெற்றிகளில் மகிழ்ச்சி….
பெருந்துயரங்கள்
அனுகாததில் மகிழ்ச்சி….

சின்ன சின்ன
தவறுகளால்
பெரிய பாடங்கள்
கற்றதில் மகிழ்ச்சி...
பெரிய வேலைகளையும்
பிழையின்றி
செய்து முடித்ததில் 
மகிழ்ச்சி

என்றும் என்னுள்
இயங்கும் அன்பெனும்
ஆக்க சக்தி
அழுத்தம் கொண்டதில்
மகிழ்ச்சி…

அதே அன்போடும்
உற்சாகத்தோடும்
வரும் ஆண்டின் சவால்களை
எதிர் கொள்வதில்
மகிழ்ச்சியோ மகிழ்ச்சி…

Friday, December 7, 2018

Thursday, November 29, 2018

கண்ணீர்



உள்ளத்தின்
உணர்வெல்லாம்
உறுகி உறுகி
ஓர் துளியாய்...
விழியோரம்
உனக்காக
காத்திருக்கும்...

Sunday, November 18, 2018

மழை



‘சல’’சல’
தாளம் போட்டு
‘சோ’வென்று
இராகம் கூட்டி
மண் வீழும்
மழையின் பாட்டு...

மனத்தோடு
மனதை கட்டி
உன்னோடு
எனனைச் சேர்த்து
உயிர் மீது
இன்பம் எழுதும்...

Tuesday, November 13, 2018

முப்பொழுதும் உன் கற்பனையில் ...




வீழ்கின்ற மழைத்துளியில்
விடிகின்ற செங்கதிரில்
நீழ்கின்ற வானத்தில்
நீந்துகின்ற நிலவொளியில்
பூவிதழில் வண்டினங்கள்
பாடுகின்ற இராகத்தில்
ஓவியமாய் என்நெஞ்சில்
உன்முகமே தோன்றுதிங்கே

நீ..
பேசாத வார்த்தைகளில்
புரிகின்ற அர்த்தங்கள்...

உன்னைக்..
காணாத பொழுதுகளில்
கண்ணீரில் நினைவலைகள்...

நாளும்..
வாடாத மலர்வீசும்
மணமெல்லாம் உன்நேசம்

என்சுவாசம்..
சேர்கின்ற காற்றும்உன்
உள்ளத்தின் மொழிபேசும்...