Friday, December 21, 2007

காதலிக்க கற்றுக் கொள்ளுங்கள்

காதலிக்கத் தெரியவில்லை எனக்கு

கல்யாணம் செய்து வைத்தார்கள்
கட்டாயமாய் காதலிக்கச்சொல்லி...

ஒப்பந்தபடி
அவன் வீட்டில் நான்..

'நான்' ம் 'அவன்' ம்
'நாங்கள்' ஆகிப் போனோம்
பிறர்கண்களுக்கு..

காலம் சில மாதங்களை
கழித்து விட்டு சென்றது..

பழகிப் போனது
என் இருப்பு அவனுக்கும்
அவன் இருப்பு எனக்கும்..

சின்னத் தலை வலி
எனக்குத் தெரியும்
தலைவலியின் தாக்கம்..
காபி கொடுத்து
தைலம் தடவி
தூங்கச்சொன்னதில்
சின்ன அதிர்வு
அவனிதயத்தில்...

சாதரண சுரம் தான்
மிளகு ரசம்,சுட்ட அப்பளம்
நானில்லாமல் சமையல் நடந்தது
எங்கள் வீட்டில்..
அலுவலகம் சென்றதும்
அக்கரையாய் என் நல விசாரிப்பு
அன்பின் சுனாமியில்
ஆடியது என்னிதயம்...

எந்த நாளில்
எந்த நேரத்தில்
எந்தநொடியில்
எதுவும் தெரியாது
அவனிதயத்தில் நானும்
என்னிதயத்தில் அவனும்
அழிசாட்டியமாய் அமர்ந்துக்கொண்டது...

இப்போது

காதலித்துக்கொண்டிருக்கிறோம்..
என்னை அவனும்
அவனை நானும்
நாங்கள்
எங்கள் குட்டிக்கண்ணனையும்....

12 comments:

புரவி said...

நல்லா இருக்குங்க....


புரவி

ராமலக்ஷ்மி said...

அருமையாக கற்றுக் கொடுத்திருக்கிறீர்கள்.

வாழ்த்துக்கள் உமா.

ஆ.ஞானசேகரன் said...

//காதலிக்கத் தெரியவில்லை எனக்கு

கல்யாணம் செய்து வைத்தார்கள்
கட்டாயமாய் காதலிக்கச்சொல்லி...//

வாவ்வ்வ்வ்வ்வ்வ் சூப்பர்

sakthi said...

காதலிக்கத் தெரியவில்லை எனக்கு

கல்யாணம் செய்து வைத்தார்கள்
கட்டாயமாய் காதலிக்கச்சொல்லி...

ஒப்பந்தபடி
அவன் வீட்டில் நான்..


arumai ma

வினோத்குமார் said...

hi uma its very nice

Anonymous said...

மிக அருமை - நீலக்கண்ணன்

Neelakannan said...

மிக அருமை - நீலக்கண்ணன்

F.NIHAZA said...

எவ்வளவு அழகாக வெளிப்பட்டது இந்தக் காதல்
அருமை

F.NIHAZA said...

எவ்வளவு யதார்த்தமாக வெளிப்பட்டது இந்தக் காதல்.
கவிதை அருமை

F.NIHAZA said...

எவ்வளவு யதார்த்தமாக வெளிப்பட்டது இந்தக் காதல்.
கவிதை அருமை

Kumudameera said...

கொள்ளை அழகு உமா...

உமா said...

நன்றி குமுதா..