Wednesday, January 30, 2019

உள்ளத்தின் உறவுகள்

என் அன்பு
சகோதரா....
எனதருமை
சகோதரி....

ஒரு அழுத்தமான
ஆலமரத்தின்
விழுதுகளாய் நாமிருந்தப்போது
ஆடிக் களித்திருந்தோம்...

ஆணிவேர்...
'அம்மா'
அவள் அற்றுப் போனப் போது
சற்று ஆட்டம் காண்டோம்...
ஆனாலும் சாய்ந்துவிடவில்லை....

விழுதுகள் நாம் 
விரூட்சங்களானோம்...
வேர்விட்டு வளர்ந்து நின்றோம்...

ஒரே மரத்தின் விழுதுகள்
விலகி நிற்க முடியுமா?

இதோ
என் கிளைகளில்
உங்கள் இலைகளின் வாசம்...

என் சுவாசத்தில்
உங்களின் நேசம்...

என் அன்பு சகோதரா
அருமை சகோதரி...

எனக்கும்
உங்களுக்குமான
பந்தம்...
ஒரு தொலைப் பேசி
எண்ணில் மட்டுமல்லாமல்

எண்ணங்களிலும்
கலந்திருக்கும்....

நீங்கள்
நலம் வாழ்ந்தால்
நான்
உயிர் வாழ்வேன்...

என்
அன்பையும்
பாசத்தையும்
நேசத்தையும்

நம்
தாய் தந்த
தமிழில்
உங்களுக்காக
உமா.....



No comments: