Wednesday, January 30, 2019

உள்ளத்தின் உறவுகள்

என் அன்பு
சகோதரா....
எனதருமை
சகோதரி....

ஒரு அழுத்தமான
ஆலமரத்தின்
விழுதுகளாய் நாமிருந்தப்போது
ஆடிக் களித்திருந்தோம்...

ஆணிவேர்...
'அம்மா'
அவள் அற்றுப் போனப் போது
சற்று ஆட்டம் காண்டோம்...
ஆனாலும் சாய்ந்துவிடவில்லை....

விழுதுகள் நாம் 
விரூட்சங்களானோம்...
வேர்விட்டு வளர்ந்து நின்றோம்...

ஒரே மரத்தின் விழுதுகள்
விலகி நிற்க முடியுமா?

இதோ
என் கிளைகளில்
உங்கள் இலைகளின் வாசம்...

என் சுவாசத்தில்
உங்களின் நேசம்...

என் அன்பு சகோதரா
அருமை சகோதரி...

எனக்கும்
உங்களுக்குமான
பந்தம்...
ஒரு தொலைப் பேசி
எண்ணில் மட்டுமல்லாமல்

எண்ணங்களிலும்
கலந்திருக்கும்....

நீங்கள்
நலம் வாழ்ந்தால்
நான்
உயிர் வாழ்வேன்...

என்
அன்பையும்
பாசத்தையும்
நேசத்தையும்

நம்
தாய் தந்த
தமிழில்
உங்களுக்காக
உமா.....



உனக்கான என் கவிதைகள்

அறம் சொல்லிய
என் கவிதைகளை
அகம் பேச வைத்த
தலைவன் நீ....💜

Monday, January 21, 2019

காதல்

என் மனத்திரையில்
பின்னனி இசையாய்
எப்பொழுதும் உன் நினைவுகள்...

வார்த்தைகள் அற்று
மௌனம் பேசி நிற்கும்
உதடுகள்...

கண்களோ!
கதைப் பேச
காதல் சொல்லக் காத்திருக்கும்...

அவசரமாய் துடிக்கும் என் இதயத்தோடு
போட்டிப் போட்டு
தோற்றுப் போகும் அறிவு...

நடக்காமல்
மிதக்கும்
கால்கள்...

உனக்கான என் கவிதையை மட்டும்
எழுதிக் காட்டும்
கைகள்...

உன் பார்வைத் தூண்டிலில்
சிக்கிக் கொள்ள தவம் கிடக்கும்
என் விழி மீன்கள்...

நீயும் என்னைக்
கொஞ்சம்
காதலித்துப் பார்...

என் சின்ன அசைவுகளுக்கும்
சரியான அர்த்தம்
உனக்குப் புரியும்..

கொஞ்சம்
காதலித்துப்
பார்......

Tuesday, January 8, 2019

படக் கவிதைகள்


படக் கவிதைகள்

ஒரு நாள் உருமாற்றம் கொள்ள நேர்ந்தால் யாராக, எதுவாக மாற விருப்பம். என்ன செய்வாய்? என்பது கேள்வி.  இது என் பதில்...