Wednesday, March 31, 2010

என்றென்றும் உன்

மா மா காய்
மா மா காய்

அன்பு என்றச் சொல்லுக்கே
ஆனாய் விளக்கம் கண்ணெதிர்நீ
கண்ணை இமையும் பிரிந்திடலாம்
கடலில் அலையும் ஓய்ந்திடலாம்
தன்னை மறந்து தெளிவிழந்து
யானும் வாழ நேரிடலாம்
உன்னைப் பிரிந்து ஒருகணமும்
உயிரோ டிருக்க முடியாதே!

கதிரோன் தன்னால் இவ்வுலகில்
காணும் எல்லாம் உயிர்த்திடுமே
மதியின் ஒளியும் அவனாலே
மண்ணில் மழையும் அவனாலே
சதியென் வாழ்வும் உன்னாலே
சாவும் உந்தன் மடிமீதே
கதியுன் கையாம் கர்ப்பத்தில்
காலம் கரையக் களித்திருப்பேன்...

மடிமேல் உன்னை நானிருத்தி
மயக்கம் தீர துணையிருப்பேன்
இடிப்போல் துன்பம் தீண்டாமல்
எந்தன் தோளில் சாய்ந்திடுநீ
வடியும் துயரும் விழிநீரை
வாவென் கண்ணில் வழியவிடு
தடையே யின்றி நீயுயரும்
தருனம் நானுன் கால்நிழலில்.

6 comments:

த.வசந்தகுமார் said...

தங்கள் ஆக்கம் மிகவும் பிடித்திருக்கிறது.

உமா said...

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி திரு.வசந்த குமார். தொடர்ந்து வருக.

சிவகுமாரன் said...

மடிமேல் உன்னை நானிருத்தி
மயக்கம் தீர துணையிருப்பேன்
இடிப்போல் துன்பம் தீண்டாமல்
எந்தன் தோளில் சாய்ந்திடுநீ
வடியும் துயரும் விழிநீரை
வாவென் கண்ணில் வழியவிடு./////

அருமை.

Unknown said...

Very nice

உமா said...

Thank you sir

VISWANATHAN PADMANABHAN said...

என்றென்றும் உன் -

UMA து சொல்லாற்றல் அருமை

பனிப்பாறையின் வழவழப்பில் சறுக்கி
வருவது போன்ற அனுபவம் வரிகளின் அணிவகுப்பில்

இன்று போல் என்றும் வாழ வாழ்த்துக்கள்